#BREAKING ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.! தேமுதிக கூட்டணியில் இல்லையா?! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையில் பாஜக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, EN கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் இந்த கூட்டணி தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. கடந்த  20 நாட்களாக தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி குறித்து பல கட்ட ஆலோசனைகளை நடத்தி உள்ளது.

அதேபோல் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் குறித்து விஜயகாந்த் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் ஆறு முறை இதுவரை ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் விஜயகாந்தை அவரது இல்லத்தில் நேரடியாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில், இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக வின் கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு மற்றும் நமக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே வெளியான தகவலின் படி, தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு இன்று மாலைக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின. 

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, அதிமுகவுடன் கூட்டணியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதனை உறுதிசெய்யும்படி, இன்று மோடி தலைமையில் நடக்கவுள்ள பிரச்சார கூட்டத்தின் மேடையில், தேமுதிக தலைவர் விஜயஜகாந்த், தமாக தலைவர் ஜி.கே வாசன் புகைப்படங்களும், இருக்கைகளும் இடம்பெற்று இருப்பது இந்த கூட்டணியை உறுதிசெய்துள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அவர்கள், அதிமுக அணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதி என்றும்,  தேமுதிக தலைவர்கள் சற்றுநேரத்தில் என்னை சந்திக்க வர உள்ளனர்'' என்றும் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியான தகவலின் படி, சென்னை தனியார் ஓட்டலில் பியூஸ் கோயல், தங்கமணி, சுதீஷ் பேச்சுவார்த்தை எனவும், வேலுமணி, தமிழிசை உள்ளிட்டோரும் பேச்சுவார்த்தையில் பங்கேற்பு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPE OPEN TALK ABOUT DMDK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->