#BREAKING தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.! தினகரனுக்கு அழைப்பு.! ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமையும் என்று அரசியல் விமர்சகர்களும், அரசியலை உற்று நோக்கும் வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சமீப காலமாக அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பல செய்து வந்த வண்ணம் உள்ளன.

இருப்பினும் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் பாஜக-வுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதை அவர்களின் பேட்டிகளிலேயே காணலாம். குறிப்பாக துணை சபாநாயகர் தம்பிதுரை ஆளும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 

நிலைமை இப்படி இருக்க தமிழகத்தில் பாஜக கூட்டணி அமைப்பது குறித்து பாஜக அமைத்துள்ள குழு, தேமுதிக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாஜக அதிமுக இடையே தொகுதி பங்கீடுகள் ஆகியுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

நிலைமை இப்படி இருக்க,  வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 25 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழகத்தில் பாஜக நிச்சயம் அதிமுகவுடன் கூட்டணி வைக்கும் அதற்குண்டான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிமுக தரப்பில் வேலைகள் நடந்து வருகிறது. அதேபோல் எங்கள் தரப்பிலும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 25 இடங்களை பாஜக கைப்பற்றும் என்று அந்த பேட்டியில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், சற்றுமுன் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ் அவர்கள், ''கூட்டணி தொடர்பாக தேசிய, மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது; பேச்சுவார்த்தை தொடர்பாக விரைவில் முடிவு எட்டப்படும். எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மனம் திருந்தி மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

அப்போது செய்தியாளர் ஒருவர் ஓபிஎஸ் அவர்களிடம், இதனை தினகரனுக்கான அழைப்பாக எடுத்து கொள்ளலாமா என்று கேட்க, அதற்கு ஓபிஎஸ் அவர்கள், ''இது அனைவருக்கும் பொருந்தும்'' என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். 

இந்த செய்தி தெரியுமா உங்களுக்கு #BREAKING சற்றுமுன் ஆளும் கட்சி எம்.எல்.ஏ சுட்டு கொலை.! உச்சகட்ட பதற்றம்.!!                      


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPE INVITE TO DINAKARAN


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->