இட ஒதுக்கீடு மசோதா! அவசர அவசரமாக நிறைவேற்ற காரணம்! வெளியான பகீர் காரணங்கள்!  - Seithipunal
Seithipunal


பொருளாதார அளவில் ஏழ்மையாக உள்ள பொதுப்பிரிவினருக்கு அதாவது முன்னேற்றம் அடைந்த சாதியினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை நேற்று முன்தினம் மத்திய அரசு கொண்டு வந்தது. 

இந்த கூட்டத்தொடரில் இல்லாத இந்த திடீர் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்து நிறைவேற்றினார். இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில்  இன்று தாக்கல் செய்ய, விவாதத்திற்கு வந்து வாக்கெடுப்பின் முடிவில் நிறைவேறியது.  

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்த கட்சிகளும் இந்த மசோதாவை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் நேரடியாக எதிர்க்காமல் மறைமுக ஆதரவு அளித்துள்ளார்கள் என்பது வாக்கெடுப்பு கணக்கின் படி தெரிகிறது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த மசோதாவை மக்களவையில் எதிர்த்து வாக்களித்தவர்கள் 3 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் இருந்த 326 பேரில் 323 பேர் ஆதரித்து வாக்களித்தனர். அதேபோல மாநிலங்களவை வாக்கெடுப்பில் 149 பேர் ஆதரித்தும், 7 பேர் எதிர்த்தும் வாக்களித்தார்கள். 

இந்த மசோதாவை மத்திய அரசு இவ்வளவு வேகமாக இயற்றியதற்கு முக்கிய காரணமாக சமீபத்தில் முடிந்த சட்டமன்ற தேர்தல் தோல்விதான் காரணம் என கூறப்படுகிறது. ஏனெனில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஸ்கர் மாநில உயர்ச்சாதி  மக்கள் பாஜகவை புறக்கணித்தனர் என்று கூறப்படுகிறது. அதனாலேயே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதே நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவை எதிர்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oc reservation reason behind of politics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->