48 மணி நேரத்தில் சாதித்த மோடி! அசத்தல் வேகத்தில் செயல்பட்ட மோடி சர்க்கார்!  - Seithipunal
Seithipunal


அனைத்து சமூகத்தவரும் நாட்டின் அனைத்து நிலைகளிலும் பங்குபெற வேண்டும் என்பது சமூக நீதியாகும். அதனை கருத்தில் கொண்டு நாட்டில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு ஆனது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் பொருளாதார அளவில் ஏழ்மையாக உள்ள பொதுப்பிரிவினருக்கு அதாவது முன்னேற்றம் அடைந்த சாதியினருக்கு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வேண்டும் என்பதற்காக அரசியல் சட்டத்தில் 124-வது திருத்தம் செய்யும் மசோதாவை நேற்று முன்தினம் மத்திய அரசு கொண்டு வந்தது. 

இந்த கூட்டத்தொடரில் இல்லாத இந்த திடீர் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, இந்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலமான எதிர்ப்புகளுக்கு இடையே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 

ஆனால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்தவர்கள் 3 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் இருந்த 326 பேரில் 323 பேர் ஆதரித்து வாக்களித்தனர். இந்நிலையில், இந்த மசோதா மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு வந்தது. 

இந்த 10% இட ஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதற்கு முன்பு நரசிம்மராவ் ஆட்சியில் 10% இடஒதுக்கீடு கொண்டு வந்தபோது ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்தது குறிப்பிட்டு மாநிலங்கவையில் விவாதம் நடைபெற்றது. இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.

சற்றுமுன் நடைபெற்ற மாநிலங்களவை வாக்கெடுப்பில் 149 பேர் ஆதரித்தும், 7 பேர் எதிர்த்தும் வாக்களித்தார்கள். மசோதா தாக்கல் செய்யப்பட்ட 48 மணி நேரத்தில் மசோதாவை நிறைவேற்றி மோடி அரசு அசத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

oc category 10% reservation bill passes in both sabha of parliment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->