யாருடனும் கூட்டணி இல்லை.! தேமுதிக தனித்தே போட்டி.!! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவை தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்து தீவிர பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இதில், தமிழகத்தை பொருத்தவரை அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒன்று அமைந்துள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் மேலும் இன்னும் சில ஒரு கட்சிகள் இணையலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே தேமுதிக உடன் நடத்த அதிமுக நடத்திய பல கட்ட கூட்டணி பேச்சவார்த்தையில், அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக, அதிமுகவின் அமைச்சர்கள் முதல் பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரை தெரிவித்துவந்தனர்.

நேற்று மாலை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், நேரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று அவரின் உடல் நலம் விசாரித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி இறுதி செய்து இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று காலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் கூடி கடந்த இரண்டு மணி நேரமாக நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம், எத்தனை தொகுதிகள் கேட்கலாம், கூட்டணியில் நிபந்தனைகளில் ஏதேனும் வைக்கலாமா போன்ற பல்வேறு ஆலோசனைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் நாம் தனியாகவே போட்டியிடலாம் என்ற நிலைப்பாட்டில் தேமுதிக வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெளியான இந்த தகவல் தமிழக அரசியல் கட்சிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NO ONE ALLIANCE WITH DMDK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->