திடீர் திருப்பம்.! நிர்மலாதேவி விவகாரத்தில் சிக்கிய அமைச்சர்கள்.! முதல்முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிர்மலாதேவி.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் அந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயற்சித்ததன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்துகொண்டு இருக்கிறது. 

இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக கல்லூரியின் பேராசிரியர்கள் முருகன் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு., இந்த பிரச்சனை தொடர்பான வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த பிரச்சனை குறித்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்., குற்றம் சாட்டப்பட்ட முவரும் பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு சமர்பிக்கப்பட்டனர்.  

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் வரும் 30 ம் தேதியன்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதற்கிடையே, தனக்கு பலமுறை ஜாமீன் வேண்டும் என்று மனு அளித்து இருந்தார். இந்த மனு மீதான ஒவ்வொரு விசாரணையின் போதும், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,  தனக்கு ஜாமீன் கிடைக்காமல் பல இடையூறுகள் செய்யப்படுவதாகவும், தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது பின்னணி உள்ளது என்றும் பேராசிரியை நிர்மலாதேவி முதன்முறையாக பேட்டி அளித்துள்ளார். இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பின் செய்தியாளர்களுக்கு முதல் முறையாக பேட்டியளித்த பேராசிரியை நிர்மலா தேவி, ''தன்னிடம் சிபிசிஐடி மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார். 

மேலும், தனக்கு ஜாமீன் கிடைக்காமல் பல இடையூறுகள் செய்யப்படுவதாகவும், தனக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது பின்னணி உள்ளது என்றும் நிர்மலாதேவி தெரிவித்துள்ளார். நிர்மலா தேவியின் இந்த பெட்டியில் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே,  நிர்மலாதேவி வழக்கறிஞர் பசுபதி பாண்டியன் ஸ்ரீவில்லிபுத்தூரில் பேட்டியில், ஜாமீன் கிடைக்காமல் பல இடையூறுகள் செய்யப்படுவதாகவும், ஜாமீன் மறுக்கப்பட்டது பின்னணியில் அரசியல் சதி உள்ளது என்றும், இதின் பின்னணியில் அமைச்சர்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nirmaladevi open talk about the case issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->