தமிழகத்தில் உதயமாகியது ''மனித உரிமை காக்கும் கட்சி''.! அரசியலில் மீண்டும் களமிறங்கிய பிரபல நடிகர்!!  - Seithipunal
Seithipunal


நவரச நாயகன் நடிகர் கார்த்திக் கடந்த 2006 ஆம் ஆண்டு பார்வர்டு பிளாக் கட்சியில் தன்னை இணைத்து கொண்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவருக்கு அந்த கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கபட்டது.

பின் 2009 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக், 'அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, அந்த கட்சியின் தலைவராக இருந்தார். மேலும் கடந்த பொதுதேர்தலில் பாஜக கூட்டணியிலும் இந்த கட்சி இடம் பெற்றது. 

இதற்கிடையே, மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ளதால், தற்போது கார்த்திக் அந்த கட்சி கலைத்துள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இன்னும் 2. 3 தினங்களில் மக்கள் நலன் காக்கும் பொருட்டு அரசியல் கட்சியை, இயக்கத்தை புதிய பெயரில் மதுரையில் தொடங்க உள்ளதாகவும், தமிழக அரசியல் ஜாம்பவான்கள் ஜெயலலிதா, கருணாநிதி அரசியலில் இருந்த போது மரியாதையின் காரணமாக என் கருத்துக்களை எடுத்து வைக்க இருந்த தயக்கம் கொண்டேன்.

இனி அது என் அரசியலில் இருக்காது. அரசியலில் ஈடுபட இது சரியான நேரமாக கருதுகிறேன். ரஜினி கமலுக்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவன் கிடையாது. திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து பொறுத்திருந்து சொல்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ''மனித உரிமை காக்கும் கட்சி'' என்று தன்னுடைய கட்சியின் பெயரை மாற்றி,  நடிகர் கார்த்திக் அரசியலில் மறுபிரவேசம் செய்து உள்ளார். புதிய கட்சியின் துவக்கம் மற்றும் அறிமுக விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், ''இனி அரசியலை விட்டு விலகப் போவதில்லை'' என்றும் அறிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new party in tamilnadu at actor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->