திடீர் சர்ச்சை..! தேவேந்திரர்களை பட்டியல் வகுப்பிலேயே தொடரச் செய்ய வேண்டும் - எதிரணியினரின் கலங்க வைக்கும் கோரிக்கை..? - Seithipunal
Seithipunal


தேவேந்திரகுல வேளாளர் என்ற ‘பள்ளர்’சமுதாயத்தினரை, அட்டவணைச் சாதிகள் பட்டியலிலேயே தொடரச் செய்ய வேண்டும் என்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற ஒரு சிலரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேவேந்திரர் சமூகப் பாதுகாப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் சமீபத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர்.

இது குறித்து அவர்கள் வைத்துள்ள கோரிக்கை மனுவில், ‘‘சாதியக் கட்டமைப்பில், தேவேந்திரர் சமூகம் நீண்ட நெடிய காலமாக, பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒடுக்குமுறைகளிலிருந்து, தங் களை விடுவித்து சமூகம், அரசியல், கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் முன்னேறி தன்மானத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்வதற்காகவே இச்சமூகத்திற்கு, இடஒதுக்கீடு உள்ளிட்ட பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், தேவேந்திரர் எனப்படும் பள்ளர் சமூக மக்களை, அட்டவணைச் சாதிகள் பட்டியலிலேயே தொடரச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அதேநேரம், தேவேந்திரர் சமூக மக்களை,அட்டவணைச் சாதிகள் பட்டியலிலிருந்து வெளியேற்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும்என்று வலியுறுத்தும் ஒருசில குழுக்களின் நிர்வாகிகள், ஒட்டுமொத்த பள்ளர் சமூகத்தின் பிரதிநிதிகள் அல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new cast controversy started


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->