கோட நாடு தனியார் இடம் என்று முதல்வர் சொன்னது தவறு. அந்த ஆவணங்கள் எங்கே? முத்தரசன் கேள்வி…! - Seithipunal
Seithipunal


 

கோடநாடு கொள்ளை மற்றும் கொலை விவகாரம், இன்னும் விலகாத மர்மமாகவே இருக்கிறது. இந்த வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த சயான், இந்த விவகாரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைத் தொடர்புப் படுத்தி அறிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, கோட நாடு தனியாருக்குச் சொந்தமான இடம் என்று முதல்வர் அறிக்கை விடுத்தார். முதல்வரின் இந்தக் கருத்தும் பல விமர்சனங்களுக்கு உள்ளாக்கி இருக்கிறது.

இது தொடர்பாக, முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

“கோடநாட்டில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மாதக் கணக்கில் தொடர்ந்து தங்கி உள்ளார். அப்போதெல்லாம், அரசுக் கோப்புகள் அனைத்தும், அவரின் பார்வைக்காகவும், கையெழுத்திற்காகவும், கோடநாட்டிற்கு கொண்டு செல்லப் பட்டன.

அங்கிருந்து தான், ஜெயலலிதா ஆட்சி செய்தார். அவரது அரசு அலுவலகங்களும் அங்கு தான் செயல் பட்டன. எனவே, இன்னும் ஜெயலலிதாவினால் பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் பல இருக்கக் கூடும். எனவே, கோடநாடு எஸ்டேட்டை, தனியார் இடம் என்று முதல்வர் சொல்வது சற்றும் பொருந்துவதாக இல்லை.

அந்த பங்களாவிற்கு, பலத்த மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. 28 சிசடிவி கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதையெல்லாம் தாண்டி, எப்படி அங்கே கொலை மற்றும் கொள்ளை நடைபெற்றது? கொண்டு செல்லப்பட்ட ஆவணங்கள் எங்கே உள்ளன, என்பதைக் கண்டு பிடித்து, அதனை வெளிப்படுத்த வேண்டியது முதல்வரின் கடமை என்று, முத்தரசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mutharu questioned to Edapadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->