உண்மைகளை உடைத்த அரசியல் பிரமுகர்..! ஒன்றை அறிவித்துவிட்டு, ஒன்றை மறந்தார்களா? அல்லது மறைத்தார்களா? - Seithipunal
Seithipunal


குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடைகிறது..

இவ்விரு மாநிலங்களுக்கும் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க, இந்திய எலெக்க்ஷன் கமிஷன்  முடிவுசெய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

அக்டோபர் 2-ஆவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எலெக்க்ஷன் கமிஷன் வட்டாரங்கள் கூறிவந்தன.

அதற்கேற்ப, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.

குஜராத், இமாச்சலப் பிரதேச மாநில தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் செய்தியாளர்கள் குவிந்தனர்.

ஆனால், இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவையின் 68 தொகுதிகளுக்கு மட்டும் நவம்பர் 9-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்த தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல் குமார் ஜோதி, குஜராத் மாநிலத்திற்கு தேர்தல் அறிவிக்கவில்லை.

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் 18-ஆம் தேதிக்குள், தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று மட்டும் அவர் தெரிவித்தார்.

விரைவில் எலெக்க்ஷன்  அறிவிக்கப்படும் என்றதால், அக்டோபர் 16-ஆம் தேதி குஜராத் மாநிலத் தேர்தல் தேதி அறிவிப்பு இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

எனினும் இதுவரை குஜராத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. எலெக்க்ஷன் தேதியை இப்போதே அறிவித்தால் நடத்தை விதிமுறைகள் அம்மாநிலங்களில் உடனடியாக அமலாகிவிடும் எனவும்,

அதனால், அரசு மேற்கொண்டு வரும்திட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும் என்பதாலேயே, குஜராத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.

குஜராத் மாநில சட்டப் பேரவையின் தேர்தல் தேதியை, அவரது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு எலெக்க்ஷன் கமிஷன் அங்கீகாரம் வழங்கியுள்ளது எனவும்,

குஜராத் மக்களுக்கு சலுகைகள் மற்றும் இலவசங்களை அறிவித்த பின்னர், தேர்தல் ஆணையம் தனது விடுமுறையை முடித்துக் கொண்டு தேர்தல் தேதியை அறிவிக்கும் எனவும் சிதம்பரம் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் முன்னாள் ஆணையர்கள் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஒய். குரேஷி ஆகியோரும் எலெக்க்ஷன் கமிஷன் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது, அந்த மாநிலத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டவர்தான் அச்சல் குமார் ஜோதி.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஓய்வு பெற்றார். 2014-இல் மோடி பிரதமர் ஆனதும், எலெக்க்ஷன் கமிஷனில் உள்ள 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவராக அச்சல் குமார் ஜோதி 2015-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

இதனிடையே தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நஜீம் ஜைதி ஓய்வுபெற்றதையொட்டி, ஜூலை 6-ஆம் தேதி புதிய தலைமை தேர்தல் ஆணையராகவும் அச்சல் குமார் ஜோதி நியமிக்கப்பட்டார்.

அச்சல் குமார் ஜோதி, தேர்தல் ஆணையத்திற்குள் கொண்டுவரப்பட்ட போதே அவரது நியமனம் விமர்சனத்திற்கு உள்ளானது.

ரிசர்வ் வங்கி ஆளுநரைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்திற்கும் குஜராத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்படுவதாக மோடி மீது விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi's new idea for gujarath election commision


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->