தேர்தலில் தோல்வி! நள்ளிரவில் மனம்திறந்த பிரதமர் மோடி.!! பாஜகவினர் கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு நடந்து முடிந்து, இன்று காலை 8 மணி முதல் இந்த 5 மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை  நடைப்பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜகவின் கோட்டை என்று இருந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை இழந்துள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''5 மாநில சட்டமன்ற தேர்தலில் மக்களின் இந்த முடிவை தலை வணங்கி ஏற்கிறோம். நமது வாழ்க்கையில் வெற்றியும், தோல்வியும் அங்கங்கள். 

இதுநாள் வரை மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பணியாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். தேர்தலில் வெற்றிபெற்ற எங்களது வாழ்த்துகள். இன்றைய முடிவுகள் மக்களுக்கு சேவை செய்வதற்கும், நாட்டின் வளர்ச்சிக்கு கடினமாக உழைப்பதற்கான உத்வேகத்தையும் தரும்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 5 மாநிலங்களிலும் இரவு, பகல் பாராமல் உழைத்த பாஜகவினரை வாழ்த்தி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi twit about 5 state election result


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->