தீவிரவாதிகளின் வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை.! பிரதமர் மோடி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 14 மாநிலங்களில் 116 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 7 கட்டமாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதுவரை இரண்டு கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

இந்நிலையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் ஆனது 14 மாநிலங்களில் உள்ள 116 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 

கேரளாவில் 20 தொகுதி, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் 16 தொகுதி, குஜராத்தில் 26 தொகுதி,  அசாமில் 4 தொகுதி,  பீகாரில் 5 தொகுதி, சத்தீஸ்கரில் 7 தொகுதி, உத்தரபிரதேசத்தில் 10 தொகுதி, மேற்கு வங்காளத்தில் 5 தொகுதிகள், காஷ்மீர் ஒரு தொகுதிக்கு மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தன்னுடைய சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் அஹமதாபத்தில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.
 
வாக்களித்த பின்பு செய்தியாளர்களிடம்  பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியவை, எனது சொந்த மாநிலமான குஜராத்தில் ஜனநாயக கடமையை ஆற்றியதன் மூலம் நான் அதிர்ஷ்டசாலி ஆனேன் என்றார். கும்பமேளாவில் புனித நீராடினால் தூய்மை அடைவதை போல், வாக்களிக்கும் போது அதை உணரலாம்.

மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தீவிரவாதிகளின் வெடிகுண்டைவிட வலிமையானது வாக்காளர் அடையாள அட்டை எனவே அந்த வாக்காளர் அடையாள அட்டையின் வலிமையை உணர்ந்து நாம் வாக்களிக்க வேண்டும் என்றும் கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi press meet in voter id


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->