தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழகம் வருகை ! அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது! - Seithipunal
Seithipunal


வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக, நாடு முழுவதும் 100 இடங்களில் நடக்கும் பொதுகூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதில் ஒரு பகுதியாக மோடி தமிழகம் வர இருக்கிறார். 

தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாரத பிரதமர் மோடி, வரும் 27 ம் தேதி மதுரை வர உள்ளார் என மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரை வரும் பிரதமருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிட்டு உள்ளோம். பிரதமரின் வருகை மூலம், தமிழகத்திற்கு மேலும் பல திட்டங்கள் கிடைக்க பெறும். இடைத்தேர்தலில் பாஜக நிலைப்பாடு பற்றி நாளை ( ஜனவரி 6 ) விவரமாக சொல்கிறேன். இவ்வாறு தமிழிசை தெரிவித்தார். 

பிரதமர் மோடி தமிழகம் வரும் போது பல்வேறு திட்டங்கள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா, தனுஷ்கோடி - ராமேஸ்வரம் இடையிலான ரயில் பாதை திட்டம், மதுரை - சென்னை இடையிலான அதிவேக ரயில்சேவை போன்ற பல்வேறு திட்டங்களை மோடி துவக்கி வைப்பார் என செய்திகள் வந்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MODI CoME TAMILNADU - TAMILISAI PRESS MEET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->