#BREAKING கடலூர் மொத்தமும் காலி.! சில்லு சில்லாய் சிதறும் அரசியல் கட்சி.!!  - Seithipunal
Seithipunal


கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார், வரும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், கமல்ஹாசன் வரும் மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறித்து சில தகவல்கள் அரசியல் களத்தில் கசிந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய சென்னை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட, எழும்பூர் நிர்வாகிகள் சார்பாக விருப்பமனு அளிக்கப்பட்டது. அதைப்போல் அவரது கட்சியின் துணை தலைவர்  மகேந்திரன் பொள்ளாச்சி தொகுதியில்  போட்டியிட உள்ளதாகவும், கமீலா நாசர் மத்திய  சென்னை தொகுதியில் போட்டியிட  உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் அறிமுக விழா வரும் 24-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 தொகுதிகளிலும் மநீம தனித்தே போட்டியிட உள்ள நிலையில், இன்று அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி மற்றும் செயற்குழு உறுப்பினர் ராஜினாமா செய்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சுரேஷ், மற்றும் மாநில செயற்குழு உறுப்பினரும், கடலூர் - நாகை பொறுப்பாளரான குமரவேல் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட அதிருப்தியால்  ராஜினாமா செய்துள்ளனர்.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''நேர்காணலுக்கு கூட வராமல், தான் தேர்தலில் போட்டியிடுவதாக சி.கே.குமரவேல் அறிவித்தது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் என்றும், ஜனநாயக முறைப்படி நடைபெற்ற வேட்பாளர் தேர்வுமுறைக்கு எதிராக செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைமை அவரின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் நவீன் கார்த்திக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கடலூர் மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் அவர்களும் கட்சியில் இருந்து விலகுவதாக கமலுக்கு கடிதம் எழுதியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM ONE PERSON RESIGN


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->