40-திலும் சக்சஸ்.. சாதித்து காட்டி மு.க ஸ்டாலின்.. அடுத்தடுத்து அதிரடி மூவ்.!! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் மதிமுக போட்டியிடும் தொகுதிகள் மட்டும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. 

அதனையும் இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்து இடம் முனைப்பில் திமுக தரப்பு ஈடுபட்டுள்ளது. திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இன்று தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திட அதிக வாய்ப்புள்ளது. 

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக பார்க்கப்படும் திமுக தனது தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடித்துள்ளது. 

இதற்கிடையே நாளை இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு‌.க ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தொகுதிகளை உறுதி செய்த பிறகு இந்த பயணம் மேற்கொள்ள மு க ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும், அதற்காகவே இன்று காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளை உறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் இந்தியா கூட்டணியில் அங்கங்க வைக்கும் கட்சிகளுடன் மாநில அளவில் முரண்பாடு ஏற்பட்டு வரும் இத்தகைய சூழலில் தமிழகத்தில் 40 தொகுதிகளுக்கும் திமுக தலைமையில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை எவ்வித பிரச்சனையும் இன்றி சாத்தியமாக்கியுள்ள மு.க ஸ்டாலின் நாளை மும்பையில் நடைபெறும் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin visit Mumbai tomorrow for alliance meeting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->