தேமுதிக VS துரைமுருகன்.! ஒரே வார்த்தையில் சர்ச்சையை கிளப்பிய முக ஸ்டாலின்.!! பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையில் தேமுதிக இன்று அல்லது நாளை கூட்டணி தொகுதி உடன்படிக்கை ஏற்பட உள்ள நிலையில், தேமுதிகவில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்த திமுக திட்டமிட்டு உள்ளதாக தேமுதிகவின் துணை பொது செயலாளர் எல் கே சுதீஷ் தெரிவித்துள்ளார். 

அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று ஆரம்பம் முதலே எதிர்பார்த்த நிலையில், இடையில் தொகுதி சம்பந்தப்பட்ட தொகுதி பங்கீடு தொடர்பாக இழுபறி நிலை ஏற்பட்டது. அப்போது, திமுக கூட்டணியில் தேமுதிகவை இணைப்பதற்கு திமுகவின் தலைமை முடிவு எடுத்து, முதல் கட்டமாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவர்களை தூது அனுப்பியது.

அது தோல்வியில் முடியவே, திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் விஜயகாந்தை நேரில் சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், விஜயகாந்த் எக்காரணம் கொண்டும் திமுக கூட்டணியில் சேர கூடாது என்று ஒரே முடிவில் இருந்ததாக தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் திமுகவின் முக்கிய நிர்வாகிகளை திமுக தங்கள் வசம்ப்படுத்தியது தான்.

இதற்கிடையே தேமுதிகவின் துணைப் பொதுச்செயலாளர் ஏ கே சதிஷ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, திமுகவில் இருந்து தங்களுக்கு திமுக கூட்டணியில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். மேலும் இது சம்பந்தமாக துரைமுருகனிடம் தான் தொலைபேசியில் பேசியதாகவும் அறிவித்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இந்த நிலையில், தேமுதிக நிர்வாகிகள் துறைமுருகனை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து துரைமுருகன் அளித்த பேட்டியில், தேமுதிக தங்களிடம் கூட்டணி குறித்து பேசிய தாகவும், அதற்கு நான் தேமுதிக ஒதுக்க எங்களிடம் தொகுதிகள் இல்லை, ஆற்றில் தலைவரும் இல்லை. திமுக கூட்டணி பங்கீடு முடிந்து விட்டதாகவும் தெரிவித்தாக தெரிவித்தார்.

இது குறித்து எல்.கே சுதீஷ் தெரிவிக்கையில், அரசியல் நாகரீகம் அற்ற முறையில் ஒரு கட்சி பேசியதாக துரைமுருகன் அளித்துள்ள பேட்டி தவறானது. அவர் என்னிடம் திமுக தலைமை குறித்து கூறியதை நான் கூறினால் அசிங்கமாகிவிடும். நாங்கள் அதுபோல் செய்ய மாட்டோம் என்று எல் கே சதீஷ் தெரிவித்தார்.

இதனால் துரைமுருகன் மீது ஆத்திரமடைந்த தேமுதிக தொண்டர்கள் சுமார் 100 பேர், இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்தை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் துறை முருகனுக்கு எதிராக கோஷமிட்டு தேமுதிகவிர் 50 பேரை கைது செய்தனர். மேலும் துரைமுருகன் இல்லத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

இது குறித்து முக ஸ்டாலின் இன்று மதியம் அளித்த பேட்டியில், ''தேமுதிகவினர் மீண்டும் கூட்டணி பேச வந்து இருப்பார்கள், அதனால் அவரின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். இது சம்மந்தமே பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.

முக ஸ்டாலின் அவர்கள் சொல்வது போல் தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி குறித்து பேசவில்லை என்றும், தனிப்பட்ட காரணத்திற்காவே தேமுதிக நிர்வாகிகள் துரைமுருகனை சந்தித்தாக, அந்நிர்வாகிகள் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKS OPEN TALK ABOUT DURAIMURUGAN VS DMDK


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->