ஆகா சரியான போட்டி.! முதல்வரின் கேள்விக்கு பதில் சொல்வாரா முக ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கொண்டு கிராமம் தோறும் ஊராட்சி சபை கூட்டி திமுக குறைகளை கேட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் திமுக தலைவர் இந்த ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

மேலும், அதனை தொடர்ந்து திருச்சி மணப்பாறை அருகே சீகம்பட்டியில் திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்டாலின் பேசுகையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு மறுக்கிறது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் தான் மக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மக்கள் குறைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கிராமங்கள் தான் இந்தியாவின் கோவில்கள் என்றார் மகாத்மா. அதில் நுழைகிற உணர்வைப் பெற்றேன் இன்று. எம்.எல்.ஏ க்கள் தொடங்கி எம்.பி- க்கள் வரை அனைவரையும் தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தவர்களைச் சந்தித்து, அவர்களிடம் கலந்துரையாடி, அவர்களின் மனங்களை வெல்வதே திமுக ஊராட்சி சபையின் நோக்கம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று சேலம் மாவட்டம், அரியானூரில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி அவர்கள், ''தேர்தல் வர இருப்பதால் தான் ஸ்டாலின் கிராம சபை கூட்டங்களை நடத்துகிறார். அமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் எத்தனை கிராமங்களுக்கு சென்றார்..?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin vs eps


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->