ஸ்டாலினால் மீண்டும் மிகபெரிய சறுக்கல்! திணறும் திமுகவினர்! சுயபரிசோதனை செய்து கொள்வாரா?!  - Seithipunal
Seithipunal


“சென்னை–சேலம் 8 வழிச்சாலை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது” “தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என எடப்பாடி பழனிசாமி உடனே அறிவிக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. “விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியது செல்லாது” “சுற்றுப்புறச்சூழலை பாதிக்கிறது” என்று உயர்நீதிமன்றம் தன் தீர்ப்பில் கூறியிருக்கிறது. ரூ 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமைச் சாலை அமைக்கும் இந்தத் திட்டத்தால் சேலம், தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். வாழ்வாதாரத்திற்கு வைத்திருந்த நிலங்களை எல்லாம் காவல்துறையை வைத்து பறித்தார் எடப்பாடி பழனிசாமி.

விவசாயிகள் கண்ணீரும் கம்பலையுமாக கதறியதைக் கூட கண்டுகொள்ளாமல் திட்டத்தை நிறைவேற்றியே தீருவேன் என்று காவல்துறையை வைத்து அராஜகம் செய்தார் பழனிசாமி. பத்தாயிரம் கோடி ரூபாய் திட்டத்தில் 3 ஆயிரம் கோடி ரூபாய் கமிஷன் அடிக்கவே இத்திட்டத்தை நிறைவேற்ற துடித்தார்.

மக்களின் போராட்டங்களை அடக்கினார். விவசாயிகளை கொத்துக் கொத்தாக கைது செய்தார். “விவசாயிகளை அழைத்துப் பேசுங்கள்” என்று எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டமன்றத்தில் நான் முன்வைத்த கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. இத்திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட பிறகு சேலம் 8 வழி பசுமைச் சாலை பற்றி பேசுவதையே தவிர்த்தார்.

எடப்பாடியும் - அன்புமணியும் கூட்டணி வைத்துக் கொண்டனர். ஆனால் ஐந்து மாவட்ட விவசாயிகளை உயர்நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் மூலம் காப்பாற்றியிருக்கிறது. தீர்ப்பே கேட்டு பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாடியிருப்பதும், தங்களின் நிலங்களில் போட்ட கல்களை பிடுங்கி எறிந்திருப்பதும் இந்த தீர்ப்பு மக்களுக்கு தந்துள்ள மகிழ்ச்சியை காட்டுகிறது.

மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. விவசாயிகளை கொடுமைப்படுத்திய எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். “இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன்” என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 

சரியாக தானே கூரியிருக்கிறார் இதில் எங்கே சறுக்கியுள்ளார் ஸ்டாலின் என்று நீங்கள் அனைவரும் கேட்கலாம். இதே திமுக தலைவர் முக ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன்பு சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, பசுமைவழி சாலை திட்டம் என்பது நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டம், இந்த திட்டத்தினை திராவிட முன்னேற்ற கழகம் வரவேற்பதாக அவர் தெரிவித்து இருந்தார். வரவேற்ற அவரே திமுக தேர்தல் அறிக்கையில் ரத்து செய்யப்படும் என அறிவிக்கிறார். இன்று திட்டத்திற்கு எதிரான தீர்ப்பை எடப்பாடி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது என்று மகிழ்கிறார். இந்த தீர்ப்பு மரண அடி கொடுத்திருப்பது திட்டத்தினை வரவேற்பதாக அறிவித்த அவருக்கும் தானே! 

அதேபோல இந்த திட்டத்திற்காக திமுக எவ்வித போராட்டத்தையும், வழக்கையும் நடத்தவில்லையும் என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக பாமக வழக்கிற்கு எதிராக ஆஜரனாவர் திமுக வழக்கறிஞர் வில்சன் தான் என பாமகவின் அன்புமணி கூறுகிறார்.  "உழவர்களை பாதிக்கும் இத்திட்டத்தை ரத்து செய்யக்கூடாது; செயல்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டவர் திமுக தலைமை நிலைய வழக்கறிஞர் வில்சன்  என்பதையும் மக்கள் உணர வேண்டும்" என அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

இது மட்டுமா என்றால், இதற்கு முன்பு திமுக ஆட்சியில் இருக்கும் போது முக ஸ்டாலின் கையெழுத்திட்ட மீத்தேன், கெயில் போன்ற திட்டங்களை அவரே எதிர்க்க வேண்டிய நிலையே ஏற்பட்டது. ஒரு தலைவராக அவர் முடிவுகளை எடுக்கும் முன் தன்னை பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய சூழலில் இருக்கிறார். ஏனெனில் அவர் எடுக்கும் இரட்டை நிலைபடுகளால் மக்களிடையே, இணையத்திலே அவர் கட்சி தொண்டர்கள் சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒன்று.  

சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக வழக்குப் போட்ட பா.ம.க இந்த வாக்குறுதியை அ.தி.மு.க அரசிடமிருந்து பெற வேண்டும். அப்படி வாக்குறுதி அளிக்கத் தவறினால் பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறுமா? என்ற கேள்வியையும் அவர் வைத்துள்ளார். இந்த தேர்தல் அறிவிக்கும் முன் இறுதியாக நிறைவேற்றப்பட்ட 10 % இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தான் அவர் கூட்டணி வைத்துள்ளார். அதற்காக அவர் கூட்டணியை வெளியேறிவிட்டாரா? இல்லை தானே. ஒரு தலைவராக முடிவெடுப்பதில் அவர் இன்னும் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலையில் தான் உள்ளார் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin two faces in every issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->