கட்சியை காப்பாற்றும் முயற்சியில் ஸ்டாலின் தீவிரம்… - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் நமக்கு நாமே போன்ற எழுச்சி பயணத்தை தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ஆரம்பிக்க இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். 

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கலைக்க வேண்டும் என தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் ஆரம்பம்முதலே சொல்லிவருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவை எதிர்த்து நமக்கு நாமே என்ற பயணத்தை மேற்கொண்டார் ஸ்டாலின்.

இந்த பயணம் தி.மு.கவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்க்கட்சியாக தி.மு.கவை உயர்த்த உதவியது அந்த பயணம். அதேபோல அ.தி.மு.க அரசு மீது மக்களுக்கு அதிருப்தி, வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தலில் தி.மு.கவிற்கான பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இருப்பினும் ஜெயலலிதா, கருணாநிதிக்கு பிறகு தமிழகத்திற்கு ஒரு வலிமையான தலைவர் இல்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அழுத்தமாக பதிவாகியுள்ளதாகவும், அதனை மாற்றும் ஒரு முயற்சியாகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

நவம்பர் 7-ம் தேதி தொடங்கும் இந்த பயணத்தை மேற்கு வங்க முதல்வர்  மம்தா பானர்ஜி தொடங்கி வைக்கிறார். நிறைவு விழாவுக்கு ராகுல் காந்தி வருகை தர இருக்கிறார் என்பது கூடுதல் செய்தி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK leader Stalin is going to start a political trip across Tamilnadu from November 7th


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->