மக்களவை தேர்தல் மற்றும் 21 தொகுதி இடைத்தேர்தலுக்காக ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின்! தயாரான உடன்பிறப்புகள்! - Seithipunal
Seithipunal


திமுக தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் வரும் 17 வது மக்களவை தேர்தலை சந்திக்க உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை நிறைவு பெற்றுள்ளது.

ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை தி.மு.க. பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விண்ணப்பம், வரும் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். மேலும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 7 ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்பிக்க உத்தரவிட்டுள்ளனர். வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin new announcement


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->