#BREAKING சற்றுமுன் முக ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு.! தோழமை கட்சிகளுக்கு பலத்த அடி.!! கதறும் காங்கிரஸ்.!!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி யார் யாருடன் வைக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக தலைமையில், அதிமுக, பாஜக, பாமக, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து மெகா கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில், பாமக-விற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மேலும் சில கட்சிகளும் இணைய உள்ளது. இதில் தேமுதிக உடன் இழுபறி நிலை இருந்து வருகிறது.

இதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும், தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து சுமுகமாக முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வர மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுக்கு, நண்பகல் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயம் வந்துள்ள வைகோ அவர்கள் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

இதேபோல், விடுதலை சிறுத்தைகளும் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட மூன்று தொகுதிகளை கேட்டுள்ளது. மேலும் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கட்சிகளும் தலா இரண்டு தொகுதிகள் கேட்டுள்ளன.

இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்திக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டுள்ளதை தனக்கு சாதகமாக பயன்படுத்த முக ஸ்டாலின் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தெரிகிறது.

ஒருவேளை திமுக கூட்டணியில் விஜயகாந்த் வந்தால், தோழமை கட்சிகளின் கனவு சுக்கு நூறுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காரணம் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் போக மீதம் உள்ள 30 தொகுதிகளில் திமுக 18-20, தேமுதிக 6-8 என்று போனால் மீதம் உள்ள தொகுதிகளில் தோழமை கட்சிகளுக்கு தலா 1 தொகுதி தான் கிடைக்கும். ஆகா, ஸ்டாலின் அதிரடி முடிவு, தோழமை கட்சிகளுக்கு ஆபத்து. ஒருவேளை ஸ்டாலின் காங்கிரஸிடம் இருந்து 2 தொகுதிகளை பிடுங்கவும் வாய்ப்பு உள்ளது. 

எப்படி பார்த்தாலும் திமுக கூட்டணியில் புது விருந்தாளிக்கு விருந்து.. பழைய விருந்தாளிக்கு கசப்பான மருந்து...


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN MEET TO DMDK LEADER WHAT NEXT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->