ஜன.3 முதல் மக்களை சந்திக்க இருக்கும் ஸ்டாலின்! அன்புமணி தான் காரணமா?! ஒட்டுமொத்தமாக வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகள் உள்பட அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளது. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது. 

தமிழகத்தை பொறுத்தமட்டில் திமுக மட்டுமே காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம் என முதலில் அறிவித்தது. இதையடுத்து, விரைவில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முக ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என செய்திகள் வெளியாகியது. 

இந்த நிலையில் " மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்களின் மனங்களை வெல்வோம்" என்ற முறையில் திமுகவினர், மக்களை சந்திக்க உள்ளதாக திமுக தலைமை, அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ஒவ்வொரு ஊரிலும் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த வேண்டும். வருகிற ஜனவரி 3 ஆம் தேதி முதல் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்த வேண்டும்.

அதன் படி, திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி சபைக் கூட்டத்தை ஜனவரி 3-ம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார். அதேபோல துரைமுருகன் ஈரோடு மாவட்டத்திலும், டி.ஆர்.பாலு காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஊராட்சி சபைக் கூட்டத்தை தொடங்கி வைப்பார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில்,  ஊராட்சி சபைக் கூட்டத்தை திமுக நடத்த, இது தான் காரணம் என சமூக வலைத்தளத்தில் சில செய்திகள் பகிரப்பட்டு வருகிறது. அதாவது நேற்று ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில், மூத்த நிர்வாகி ஒருவர் பேசுகையில், இப்போது நமது( திமுகவின்) எதிரி ஆளும் அதிமுகவோ, அமமுகவோ, பாஜகவோ இல்லை! பாமக தான்!. பாமக மிக பலமான கட்சியாக தமிழகத்தில் உருவெடுத்து வருகிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமகவால் தான் நாம் தோற்றோம்.  பாமகவால் தான் 60 இடங்களை இழந்தோம். பாமகவில்  ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவரும் சிறப்பாக செயல்படுகின்றனர். அவர்கள் எதோ ஒரு புதிய வியூகத்தில் உள்ளனர். அதனால் தான்,  தேர்தல் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் அவர்கள் இதுவரை அறிவிக்கவில்லை. நம்மோடு கூட்டணிக்கு வருவார்கள் என நாம் முதலில் நம்பினோம். ஆனால், அவர்கள் நம்முடன் கூட்டணிக்கு வர வாய்ப்பே இல்லை என சொல்லி விட்டார்கள். இனி யாரையும் நம்பி பலனில்லை. நாம் நேரடியாக அன்புமணியை போல தினந்தோறும் மக்களை சந்திக்க வேண்டும். அப்போது தான் நம் மீதும் மக்களுக்கு நம்பிக்கை வரும். 

அவ்வப்போது நமது கட்சியின் நிர்வாகிகள் செய்யும் சில தவறுகள் ஊடகங்களில் வெளியாகி கட்சியின் தலைமைக்கு அவப்பெயரை ஏற்படுத்து வருகிறது. இதனால், தொண்டர்கள் வரும் தேர்தல் வரை ஒழுங்காக நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும் என பல்வேறு ஆலோசனை தந்துள்ளார்.  

இதன் பின் பேசிய ஸ்டாலின், நீங்கள் சொல்வதும் சரிதான். விரைவில் மாவட்டவாரியாக மக்களை சந்திக்கலாம் என தெரிவித்துள்ளாராம்.  

அதன்படிதான், இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்பட இருக்கிறது என சமுக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Meet People In Jan3


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->