ஊருக்கு தாங்க எங்க அறிவுரை..! பேருக்குதாங்க எங்க கருப்பு சட்டை..! மத்தபடி நாங்களும் காவிதான்..!! நிரூபித்துக்காட்டிய முக ஸ்டாலின்..!!! - Seithipunal
Seithipunal


பெரியார் தலைமையிலான இயக்கம் திராவிடர் கழகம். திராவிடர் கழகத்திலிருந்து விலகிப் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக)புதிய இயக்கமொன்றைத் தொடங்கி, அந்த இயக்கத்துக்கு அண்ணாதுரை தலைமை தாங்கினார். மு. கருணாநிதி, இரா. நெடுஞ்செழியன் போன்றோர் இவருக்குத் துணை நின்றனர். திமுக 1957 ஆம் ஆண்டில் அரசியலிலும் குதித்தது. காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்திலிருந்த மத்திய, மாநில அரசுகளின் இந்தித் திணிப்பு முயற்சிகளுக்கு எதிராக போராடி, 1967 ஆம் ஆண்டில் காங்கிரசைத் தோற்கடித்து அண்ணாதுரை முதலமைச்சர் ஆனார்.

அண்ணாதுறையின் மறைவுக்கு பின் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.அவர் தமிழகத்தில் 6 முறை முதலமைச்சர் பதவி வகித்தார். அதன் பின் தற்போது திமுகவின் செயல் தலைவராக கருணாநிதியின் மகன் முக ஸ்டாலின் இருந்துவருகிறார். திராவிடர்களின் முக்கிய கொள்கையான கடவுள் இல்லை என்ற கொள்கையை திமுக, தமிழக மக்களுக்கு போதித்து வந்தாலும், திமுகவின் முக்கிய தலைவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் அதற்கு விதிவிலக்கு என்றே அவ்வப்போது கோவிலுக்கு சென்று நிரூபித்து வருகின்றனர்.

அதிலும் பெண்கள் தாலி அணிய கூடாது என்று சொல்லி ஒரு மேடையில் அறுப்பதும், பின் அவர்களே 100 பேருக்கு தன் கைகளால் தாலி எடுத்துக்கொடுத்து திருமணம் செய்துவைப்பதும் காலக்கூத்து. இந்நிலையில், இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த திமுகவின் செயல் தலைவர் முகஸ்டலின் சிறப்பு மாலை மரியாதையுடன் பூஜை நடத்தப்பட்டது. இந்த விடயம் தற்போது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

02 நாள் பயணமாக திருச்சி வந்துள்ள ஸ்டாலின், திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். இன்று காலை திருச்சி ஶ்ரீரங்கத்தில் பத்மசாலியர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகிகள் இல்லத் திருமண விழா மற்றும் காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்டாலின், திருவரங்கத்தில் உள்ள ஸ்ரீஅரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின் ஸ்டாலிக்கு யானை ஆசீர்வதித்து மாலை அணிவித்தது.

திராவிடத்தின் முக்கிய கொள்கைகளை மறந்து, அக்கட்சியின் செயல் தலைவரே இதுபோல் செய்திருப்பது, சமூகவலைத்தளங்களில் கடும் விமர்சங்களுக்கு உள்ளாகியுள்ளார் முக ஸ்டாலின். ஒரு வேளை முன்னதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி திருச்சி ஶ்ரீரங்கம் கோவிலுக்கு வந்து போன பின்தான், முதலமைச்சர் ஆனார். எனவே செயல் தலைவரும் அந்த எண்ணத்தில் வந்து இருப்பாரோ..?!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN IN TRICHY


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->