#BREAKING சற்றுமுன் எல்லாம் முடிந்தது.! கருணாநிதி நினைவிடத்தில் மு க ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள்.!! வெளியாகிறது அறிவிப்பு.?!  - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி அமைந்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக. பாமக. புதிய தமிழகம். புதிய நீதிக் காட்சிகள் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 

மேலும், இந்த கூட்டணியில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் இன்னும் சில கட்சிகள் இணையலாம் என்றும் கருதப்படுகிறது. இதில், தேமுதிக இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுகவுடன் இணைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதேபோல் தமிழ் மாநில காங்கிரஸ் ஓரிரு நாட்களில் அதிமுக கூட்டணியில் இணைய 100 சதம் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இதேபோல் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக, காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய முஸ்லீம் லீக் கட்சி மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு தலா 1 தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், திமுகவின் தோழமை கட்சிகளான ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்கிடையே நேற்று இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் சென்னை அறிவாலயத்திற்கு சென்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து, திமுகவின் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும், நேற்று விசிக, மதிமுக விடம் தொகுதி பங்கீடு குறித்து பேச அழைத்து, பின் அதனை ரத்து செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி, பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், சற்றுமுன், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் அவருடன் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தி உள்ளனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதி பங்கீட்டு குழுவினருடன் கட்சியின் தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்திய பின் நேரடியாக கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று இருப்பது நாளை ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK STALIN IN MERINA


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->