செட்டப் செல்லப்பாவாக மாறிய திமுக தலைவர் ஸ்டாலின்! அம்பலமான திட்டமிட்ட நாடகம்!  - Seithipunal
Seithipunal


தேர்தல் பிரச்சாரங்களில் ஊடகங்கள் மூலமாக நாடகங்களை அரங்கேற்றும் ஸ்டாலின் திட்டம் அம்பலமாகியுள்ளது. இதுபற்றி ஸ்டாலின் பிரச்சாரங்களில் உடன் செல்லும் செய்தியாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரித்த போது சில தகவல்கள் கிடைத்துள்ளன. 

உதாரணமாக ஸ்டாலினின் சமீபத்திய தருமபுரி மற்றும் இன்றைய மதுரை பிரச்சாரத்திற்கு சென்ற போது பழைய நமக்கு நாமே நாடகங்களான கரும்பு தோட்டத்தில் சிமெண்ட் சாலை, வீட்டு சாப்பாட்டை ஹோட்டலில் சாப்பிடுவது போன்ற பழைய நாடகங்கள் போன்றே இப்போது பல நாடகங்களை அரங்கேற்றம் செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தருமபுரியில் பிரச்சாரம் செய்ய வந்த ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி செய்து கொண்டே ஆதரவு திரட்டுவது போலவும், அப்போது அவரிடம் சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவரும் எளிதாக நெருங்கி பழகியது போல தோற்றத்தை ஏற்படுத்தியது திட்டமிட்ட நாடகமே என தெரியவந்துள்ளது. இதுபற்றி நாம் தருமபுரி முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது, அவர்கள் வருத்தத்துடன் கூறிய செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

அதாவது ஸ்டாலின் நடைபயிற்சி செல்லும் வழியில் ஏற்கனவே திமுக நிர்வாகிகளின் உறவினர்களை நிற்க வைத்து சந்திப்பது போல ஒரு செயற்கையான சந்திப்பு நடந்தது என்றும் மேலும் அவர்களை ஸ்டாலின் அடையாளம் காணும் விதமாக அவர்களுக்கும் யாரும் கண்டுபிடிக்க முடியாத பேட்ஜ் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. பேட்ஜ் குத்தப்பட்டு நின்று கொண்டிருந்த நபர்களிடம் மட்டுமே ஸ்டாலின் பேசினார், கைகுலுக்கினார், செல்பி எடுத்துக்கொண்டார். அதிலும் திமுக முக்கிய நிர்வாகி ஒருவரின் மகனுடன் செல்பி எடுப்பது போன்ற காட்சியில் அந்த சிறுவனுக்கு செல்பி எப்படி எடுப்பது என தெரியாமல் விழித்தது தனிக் கதை.

தருமபுரி நாடகம் இவ்வாறு இருக்க மதுரையில் நடந்ததோ உச்சகட்டம். இங்கு அழகிரி ஆதரவாளர்கள் திமுகவிற்கு ஆதரவாக இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க அழகிரி உருவம் பதித்த டீஷர்ட் அணிந்த நபர்கள் ஸ்டாலினிடம் கைகுலுக்குவது போலவும், திமுகவிற்கு ஆதரவு அளிப்பது போலவும் படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் அழகிரி தனது நாடாளுமன்ற தேர்தலுக்கான நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை என்பதும் திமுகவிற்கு எதிரான மனநிலையில் தான் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது போன்ற செயல்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிந்தால் இது பொதுமக்களிடையே திமுகவின் நாடகம் என்று தெரிந்துவிடும் என்பதால் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே இது போன்ற தகவல்கள் தெரிவிக்கபடுகிறது. இருந்தாலும் இந்த செயல்கள் எளிதில் அமபலமாவதை தலைவரிடம் யாராவது எடுத்து சொன்னால் நன்றாக இருக்கும்  என வருத்தத்துடன் கூறினார். ஓட்டுக்காக ஓடுவதோடு இல்லாமல் இப்படி நடிக்கவும் வேண்டிய நிலையில் திமுக உள்ளதோ! 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin did drama in election campaign


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->