பகல் கனவில் மிதக்கும் ஸ்டாலின்! 2011 இல் ஆட்சியை இழந்த அதே திமுக!  எட்டு வருடத்தில் எதனை சாதித்தது?!  - Seithipunal
Seithipunal


திமுக 2011 சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவியது முதல் 2011 உள்ளாட்சி தேர்தல், 2014 நாடாளுமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தல் என வரிசையாக போட்டியிடும் அனைத்து தேர்தல்களிலும் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்து வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்கும் மனநிலையில் இல்லை என்பதே கள நிலவரம் உணர்த்துகிறது. 

இதற்கான காரணம் என்ன என நாம் ஆய்வு செய்த போது, மாற்றத்தை விரும்பகூடிய புதிய வாக்காளர்கள் மற்றும் அதிருப்தி வாக்காளர்கள் கூட நாம் தமிழர் அல்லது மக்கள் நீதி மையம் என புதிதாக களத்தில் இருக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்கலாமா அல்லது ஆளும் அரசினால் பொதுவாக தனிப்பட்ட பாதிப்பு ஏதும் இல்லாததால் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்ற இரட்டை மனநிலையிலேயே உள்ளனர்.

8 வருடம் ஆட்சியில் இல்லாத போதும் திமுக மீதான கோபம் ஏன் பொதுமக்களுக்கு குறையவில்லை என்ற கேள்விக்கு பொதுமக்களின் பதில் பழைய சம்பவங்களை மறக்க தயாராக இல்லை என்பதே காரணமாக இருக்கிறது.

இது பற்றி மேலும் விசாரித்ததில், கடந்த 2006 - 2011 திமுக ஆட்சியில் நிலவிய அடாவடி அராஜகங்களே மக்களின் பெருங்கோபத்திற்கு முதல் காரணமாக இருக்கிறது.  ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் செய்த நில அபகரிப்பு, கட்டபஞ்சாயத்து போன்ற அராஜக செயல்களை மறக்கவும் மன்னிக்கவும் மக்கள் தயாராக இல்லை. மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் அடாவடி கொள்ளைகளும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறது. இது ஒரு புறமிருக்க கடந்த திமுக ஆட்சியில் நிலவிய மின்வெட்டு மக்களை கடும் கோபத்திலேயே வைத்திருக்கிறது.

ஆனால் தனது பழைய தவறிலிருந்து திமுக பாடம் கற்றுக் கொண்டு திருந்தும் என்று நம்பிய வாக்காளர்களுக்கு திமுகவின் அன்றாட செயல்கள், திமுகவின் அரசியல் நிகழ்வுகள் நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல தான் இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் திமுகவினர் பிரியாணி கடை, பியுட்டி பார்லர்,  செல்போன் கடை, பஜ்ஜி கடை முதல் பிச்சைக்காரன் வரை தங்களின் அராஜகத்தை அரங்கேற்றினர். இதில் கவனிக்கதக்க வேண்டிய விஷயம் மு.க.ஸ்டாலின் ஒரு கடையில் மன்னிப்பு கேட்டு வந்த பிறகும் இது போன்ற செயல்கள் தொடர்வது வாடிக்கையாகிவிட்டது. இதை திமுக தலைமை கண்டிக்க தவறிவிட்டது. மேலும் கூட்டணியில் உள்ள ஒரு கட்சி மூலம் தங்களின் பெண்பிள்ளைகளுக்கு பாதிப்பு வருமோ என அச்ச உணர்வு மேலோங்கி இருக்கிறது. 

தனது பழைய தவறுகளை திருத்திக்கொள்ள தயாராக இல்லாத திமுகவை பொதுமக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நமது ஆய்வில் காட்டுகிறது. இதனை உணர்ந்த திமுக தலைமை, திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எதிர் கூட்டணியை திட்டிக்கொண்டு வாக்குகளை கேட்டு கொண்டிருக்கிறார்கள். 

இதற்கெல்லாம் மேலாக செய்த தனது பழைய தவறுகளை எல்லாம் திருத்திக்கொள்ள முயலாமல் மீண்டும் எப்போதும் இல்லாத வகையில் திமுக 7 வாரிசுகளை களம் இறக்கி இருப்பது இளம் வாக்காளர்களை முகம் சுளிக்கும் வகையில் இருக்கிறது.  இதனால் இளைய தலைமுறையின் பார்வை திமுகவின் மீது திரும்ப மறுக்கிறது. கடந்த ஆட்சியில் இருந்த அதே நிர்வாகிகள் தான் இன்னும் திமுகவில் தொடர்கிறார்கள். அவ்வாறு இருக்க அக்கட்சியில் அமைப்பிலோ, செயல்பாட்டிலோ என்ன மாற்றம் வந்துவிடபோகிறது என்பதே மக்களின் மனநிலையாக இருக்கிறது. 

எட்டு வருடங்களாக எதிர்கட்சியாக மக்களுக்கான என்ன பணிகளை திமுக செய்துள்ளது. எல்லாவற்றிலுமே யாராவது நினைவூட்டினால் மட்டுமே ஒரு பிரச்னை இருபதையே திமுகவால் உணர முடிந்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. 

கடந்த திமுக ஆட்சியில் திமுக தலைமையின் குடும்ப ஆதிக்கமானது, கல்வி, ரியல் எஸ்டேட், சினிமா என எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறந்தது எல்லாம் அவ்வளவு எளிதில் மறக்க கூடிய விஷயம் இல்லை. அதேபோல அதனால் பாதிக்கபட்டவர்கள் எல்லாம் அதனை மறந்ததாகவும் இல்லை. குறிப்பாக குறுநில மன்னர்கள்  ஆட்சி தான் நடைபெற்றது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அதனால் தான் எட்டு வருடங்கள் ஆனாலும் திமுக அதிருப்தி வாக்குகளை கூட வாங்கும் நிலை இல்லை. இதனை உணர்ந்து தான் திமுக பல கட்சிகளை இணைத்து தமிழகத்திலே மறையும் நிலையில் உள்ள கட்சிகளை கூட சேர்த்து கொண்டு தொகுதிகளை வாரி வழங்கியுள்ளது. 

23 வருடங்கள் ஆட்சி செய்த கட்சி, ஆட்சியில் இருந்து இறங்கி எட்டு வருடங்களுக்கு பிறகும் தேர்தலில் வெற்றி பெற திணறும் நிலையில் தான் திமுக மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளது. தற்போதும் திமுக போட்டியிடும் 20 தொகுதிகளில் 4 தொகுதிகளில் கூட உறுதியாக வெற்றி பெரும் என்று சொல்லமுடியாத நிலை தான் நீடிக்கிறது. இதனால் திமுக மாவட்ட செயலாளர்கள் இறக்க வேண்டியதை இறக்க மறுக்கின்றனர். தேர்தல் வேலையெல்லாம் தொய்வு அடைந்த நிலையில் தான் உள்ளது. என்ன தான் தற்போது நிலை இவ்வாறு இருந்தாலும் மக்களின் முழு மனநிலை மே 23 ஆம் தேதியே தெரிய வரும். ஸ்டாலினின் நீண்ட நாள் முதல்வர் கனவு நிறைவேறுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin day dream


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->