தந்தையின் சிலை திறப்பு! முக அழகிரி எங்கே சென்றார்? அழகிரியின் அதிரடி பேட்டி.!! - Seithipunal
Seithipunal


மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா இன்று அண்ணா அறிவாலய வளாகத்தில் இன்று மாலை நடக்க உள்ளது. இந்த விழாவுக்கு திமுக பொது செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். முக ஸ்டாலின் தலைமை ஏற்கிறார்.

கருணாநிதி, அண்ணா சிலைகளை தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள் திறந்து வைக்க இருக்கிறார். இந்த விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

விழா முடிந்த உடன் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்க சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்தவிழாவில் முக அழகிரி என் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது. இதுகுறித்து , இன்று மதுரையில் தன்னுடைய ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முக அழகிரி அவர்கள், ''அதை நான் வீட்டில் இருந்து கொண்டே டிவியில் பார்த்து கொள்கிறேன்" என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டு சென்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk azhakiri open talk about karunanithi statue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->