லோக்கல் அமைச்சருக்காக தர லோக்கலுக்கு இறங்கிய அதிகாரிகள் - கோவையில் மாணவிகளை சோர்ந்து போகச்செய்த சோக நிகழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


 விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைக்க அமைச்சர் எஸ்.பி.வேலுமணி காலதாமதமாக வந்ததால் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மாணவிகள் வெயிலில் காத்திருந்து சோர்ந்து போயினர்.

எதிர்வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஒரு முறை மட்டும்பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு மாவட்டநிர்வாகம் நடத்தி வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 9:30 மணிக்கு இப்பேரணியை அமைச்சர்கள் துவக்கி வைப்பார் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து காலை 8 மணி முதலே பள்ளி மாணவிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனையடுத்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், காவல் ஆணையர் சுமித்சரன், வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆட்சியர் வளாகத்தில் 9.30 மணிக்கே தயராக இருந்தனர்.

ஆனால், உள்ளூர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வராமல் பேரணி துவக்கி விடக்கூடாது என்பதில் மாவட்ட நிர்வாகம் மிக உறுதியாக இருந்தது. ஆனால் 10 மணியை தாண்டியும் அமைச்சர் வரவில்லை. இதன்பின் 10:15 மணியளவில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நிகழ்விடத்திற்கு வந்தார்.

அதேநேரம், ஒரு மணிநேரத்திற்கும் மேலாக மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெயிலில் காத்துக் கிடந்ததால் மிகவும் சோர்வடைந்தனர்.

இதனையடுத்து அனைவரும் நிழலை தேட ஆரம்பித்தனர். இதற்குள் அதிகாரி ஒருவர், அமைச்சர் அருகில் வந்துவிட்டார் என கூற நிழல் தேடிய மாணவர்கள் மீண்டும் வெயிலில் வரிசையாக நின்றனர்.

இருப்பினும் அமைச்சர் வந்தபாடில்லை. இதனால் சிற்றுண்டி, குடிநீர் என்று எந்த வசதியும் இல்லாமல் ஏற்கனவே களைத்துப் போயிருந்த மாணவிகள் மேலும் களைப்படைந்தனர். இதற்கிடையே அங்கிருந்த ஊடகவியலாளர்களும் பொறுமையிழந்து, இருப்பவர்களை வைத்து பேரணியை துவக்குமாறு அதிகாரிகளிடம் நெருக்கதுவங்கினர்.

ஆனால், அதிகாரிகளோ அமைச்சர் வந்துட்டார், கொஞ்சம் பொருங்க என ஊடகவியலாளர்களை சமாதானப்படுத்துவதிலேயே குறியாக இருந்தனர்.இதன்பின் சுமார் 10:30 மணிக்குதான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருகை புரிந்தார். இதன்பின் பேரணி துவக்கி வைக்கப்பட்டது.

இதனையடுத்து வ.உ.சி பூங்கா மைதானத்தை நோக்கி “பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்தி முகம் வாடியவாறு மாணவிகள் நடைபயணம் மேற்கொண்டனர். இதுபோன்ற விழாவிற்கு இனிமேலாவது அமைச்சர் குறித்த நேரத்தில் வரவேண்டும்என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister-velumani-statement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->