#BREAKING:: திடீர் ட்விஸ்ட்.. அப்டேட் கொடுத்த பி.டி.ஆர்.. குஷியில் ஆதரவாளர்கள்..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்ய உள்ளதாக கடந்த ஒரு வார காலமாக பரவலாக பேசப்பட்டு வந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அமைச்சரமையிலிருந்து முதல் ஆளாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். 

மேலும் புதிய அமைச்சராக மன்னார்குடி எம்எல்ஏ பி.டி.ஆர் ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். பல முக்கிய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோவால் அவருடைய இலாகா மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது.

இன்று காலை 10:30 மணி அளவில் ஆளுநர் மாளிகையில் உள்ள அரங்கில் புதிய அமைச்சராக டி.ஆர்.பி ராஜா பதவி ஏற்க உள்ள அதே சமயத்தில் பல முக்கிய அமைச்சர்களின் இலாக்கள் மாற்றப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்பழனிவேல் தியாகராஜனின் நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்படலாம் என தகவல் வெளியானது. இந்த நிலை நேற்று வரை தனது முகநூல் பக்கத்தில் உள்ள பயோ குறிப்பில் நிதி அமைச்சர் என்று அப்டேட் செய்யாமல் இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். தற்பொழுது தனது பயோபை "நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர், தமிழ்நாடு கூட்டாட்சி உணர்வுள்ள திராவிடன்" என அப்டேட் செய்துள்ளார். 

நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்படும் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் பயோவை அப்டேட் செய்திருப்பது அவருடைய ஆதரவாளர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இதன் மூலம் நிதியமைச்சர் பதவியில் இருந்து பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட வாய்ப்பு இல்லை என தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister PTR update his Facebook bio as finance minister


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->