கொதித்தெழுந்த தமிழக முதல்வர்! பாஜகவுக்கு கடும் கண்டனம்! - Seithipunal
Seithipunal


காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவில் மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்து, புதிய அணை கட்ட ஒப்புதல் வழங்கும்படி கோரியது. இந்த கோரிக்கையை ஆய்வு செய்து மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல்  வழங்கியது. 

                 

மேகதாது அணை திட்டத்துக்கு, தமிழக அரசும், தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பது தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. அதுமட்டுமில்லாமல், பிரதமர் மோடிக்கும் கடிதம் மூலம் தமிழக மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்தை விளக்கி உள்ளது. 

இதைத்தொடர்ந்து, நேற்று (06.12.2018) மாலை தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடியது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். பின் ஒருமித்த கருத்துடன் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், சட்டமன்றத்தில் நேற்று தீர்மானத்தை முன்மொழிந்து  எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, 

காவிரி நீர் 20க்கும் மேற்பட்ட தமிழக மாவட்டங்களின் நீர் ஆதாரத்தை பூர்த்தி செய்கிறது. காவிரி நீர் டெல்டா மக்களுக்கு ஆதாரமாக உள்ளது; பல்வேறு அணைகளை கட்ட கர்நாடகா முன்பிருந்தே  முயற்சித்து வருகிறது.
 
சிவசமுத்திரம், மேகதாது நீர்மின் திட்ட விவகாரத்தில் தன்னிச்சையாக செயல்படும் கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அரசிதழில் வெளியிடப்பட்டு தீர்ப்பு நிலைநாட்டப்பட்டுள்ளது. 

உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணையம் மூலம் மாதந்தோறும் நீர் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்தது. கர்நாடக அரசின் எந்த திட்டத்திற்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்க கூடாது என ஏற்கனவே வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி தரக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதினேன், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினேன்.

மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு நிதி ஒதுக்கிய உடனே, கர்நாடகாவின் தன்னிச்சையான நடவடிக்கையை கண்டித்து பிரதமருக்கு கடிதம் எழுதினேன்; புதிய அணை, நீர்த்தேக்கம் என எதையும் கட்டக்கூடாது என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது, கர்நாடக அரசுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.

                                          

காவிரியில் தமிழகத்திற்கு அதிக உரிமை உள்ளது. காவிரி ஒப்பந்த ஷரத்துக்களை மீறும் வகையில் கர்நாடக அரசின் செயல் உள்ளது;

பாசன பகுதிகளை கர்நாடகா 27 லட்சம் ஹெக்டேர் வரை உயர்த்தி உள்ளது. பாசன பகுதியை உயர்த்தியதால் தமிழகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கு நஷ்ட ஈடு கோரப்பட்டுள்ளது.
 
 மேகதாதுவில் அணை கட்ட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு அனுமதி அளித்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அனுமதியை திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
 
இவ்வாறாக தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் பேசினார். மேலும், தீர்மானத்தை நிறைவேற்ற அனைவரும் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்திய நீர்வள குழுமம் அனுமதி அளித்திருப்பது நம்மை கொதிப்படைய செய்துள்ளது. இந்த அனுமதியை திரும்பபெற மத்திய நீர்வள அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக முதல்வர் பழனிச்சாமி உரையாற்றினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

megathathu dam issue. EPS Speech


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->