#BREAKING திமுக கூட்டணியில் மதிமுக உறுதியானது.! ஒதுக்கப்பட்ட தொகுதியால் வைகோ கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக, காங்கிரஸ் உடன் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு, தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திமுகவின் தோழமை கட்சிகளான ம.தி.மு.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது.

இதில், விடுதலை சிறுத்தை கட்சி மட்டும் 3 தொகுதிகளை கேட்டு உள்ளது. காஞ்சிபுரம், சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விசிக போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த மூன்று தொகுதிகளும் தனி தொகுதிகள் என்பதால் விசிக இதனை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே வெளியான தகவல்கள் விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று தெரிவித்தன. ஆனால், இரண்டு தொகுதியாவது வேண்டும் என்று விசிக தொண்டர்கள் கொந்தளிக்க ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-விசிக 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றுது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு உள்ளிட்டபோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதேபோல், இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இந்நிலையில், சற்றுமுன் திமுக கூட்டணியில் மதிமுகக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைகோ அவர்கள் 4 தொகுதிகள் கேட்ட நிலையில் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MDMK ALLIANCE DMK FINAL


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->