இன்னும் 10 ஆண்டுகளுக்கு மோடியின் ஆட்சி தான்!! 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்ட இந்திய ஜாதகம்!!  - Seithipunal
Seithipunal


"பிரான்சை சேர்ந்த ஞானியான நாஸ்டர்டாமஸ் 450 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மோடியின் ஆட்சி அமையும் என்பதை கணித்துள்ளார்" என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு கடந்த 2014இல் பதவியேற்றது. மோடியின் அமைச்சரவையில் உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தன் நிகழ்ச்சிகள் குறித்து ஃபேஸ்புக்கில் தொடர்ந்து செய்திகளை வெளியிடும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த ஒரு பதிவை கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ளார்.

முகநூலில் கிரண் ரிஜிஜு ஆச்சரியமான உண்மை என்ற பெயரில் வெளியிட்ட அந்த ஃபேஸ்புக் பதிவில், " பிரான்சை சேர்ந்த ஞானியான நாஸ்டர்டாமஸ், கிபி.1555 எழுதியுள்ள பல்வேறு கணிப்புகள் தற்போது உண்மை ஆகியுள்ளன.

அவருடைய கணக்கின்படி இந்தியாவில் 2014 முதல் 2026 வரை ஒரு மனிதர் ஆட்சி புரிவார். முதலில் மக்கள் அவரை வெறுப்பார்கள் எதிர்ப்பார்கள். ஆனால் நாட்டின் நிலைமையை மாற்றி சரியான பாதையில் அவர் கொண்டு செல்வார் என்பதை பின்னால் உணர்ந்து கொள்வார்கள்.

அவருடைய தலைமையில் இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாடுகளும் வளர்ச்சி பெறும்' என்று கூறியுள்ளார் மோடி பிரதமர் என 450 ஆண்டுகளுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியமான உண்மை" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

may modi will stay pm seat till 2026


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->