கன்னியாகுமரியின் பாஜக வேட்பாளர் யார் தெரியுமா? அவரே தான்.. கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி யார் யாருடன் வைக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக தலைமையில், அதிமுக, பாஜக, பாமக, இந்திய ஜனநாயக கட்சி இணைந்து மெகா கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில், பாமக-விற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், தேமுதிக, தமாக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மேலும் சில கட்சிகளும் இணைய உள்ளது.

இந்நிலையில், இந்நிலையில், அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது பாஜக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதற்கிடையே, பாஜக போட்டியிடும் அந்த 5 தொகுதிகள் எவை?, அதற்கான வேட்பாளர்கள் யார்? என்பதை தேர்வும் செய்யும் பணியை துவங்கியுள்ளனர். முதல்கட்டமாக நமக்கு கிடைத்த தகவலின் படி, 
திருச்சி:  தமிழிசை செளந்தரராஜன்
கன்னியாகுமாரி: பொன்.ராதாகிருஷ்ணன்
திருநெல்வேலி: நைனார் நாகேந்திரன்
கோவை:  சி.பி ராதாகிருஷ்ணன்
திருப்பூர்: வானதி சீனிவாசன் அவர்களும் போட்டியிடலாம் என்று தகவல் கிடைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MAY BE KANNIYAKUMARI CANDIDATE PON RATHAKRISHNAN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->