ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பா இத செஞ்சுருக்கமாட்டாங்க!. இதுவே தமிழக்தில் அ.தி.மு.க-வின் அழிவிற்கு முதற்படி!. மம்தா பரபரப்பு பேச்சு!. - Seithipunal
Seithipunal



மத்திய அரசை ஆளும் பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக, நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது. 

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 126 ஓட்டுகளும், எதிராக 325 ஓட்டுகளும் கிடைத்தன. அ.தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு எதிராக, அதாவது ஆளும் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து கொல்கத்தாவில் நேற்று திரிணாமுல் காங்கிரஸின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான, மம்தா பானர்ஜி இதுபற்றி குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், ஜெயலலிதா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அ.தி.மு.க. எம்.பி.க்கள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் மத்திய பாரதீய ஜனதா அரசுக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள் என்று கூறினார். இது ஒன்று போதும் தமிழ்நாட்டில் அடுத்த தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை சந்திப்பதற்கு என்று கூறினார்.

பாரதீய ஜனதா மக்களின் செல்வாக்கை இழந்து வருகிறது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் பல மாநிலங்களில் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு முழுக்க குறைந்துள்ளது. இதற்கு முன்பு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதில் இருந்து விலகிவிட்டது. நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தில் சிவசேனாவும் பாரதீய ஜனதாவை கைவிட்டது.

எனவே அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா படுதோல்வி அடையும். நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், மத்திய அரசுக்கு ஆதரவாக 325 வாக்குகள் கிடைத்துள்ள போதிலும், அடுத்த தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு நூற்றுக்கும் குறைவான இடங்களே கிடைக்கும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mamtha talking about jayalalitha and central government


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->