தேர்தல் பணிக்கு வராமல், தெறித்து ஓடும் அதிகாரிகள்!! காரணம் இது தானாம்!!  - Seithipunal
Seithipunal


ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடக்க இருக்கின்றது. தேர்தல் ஆணையம் இதற்கான ஆயத்த வேலைகளை கண்காணித்து வருகிறது. மதுரையில் சித்திரை திருவிழா நடக்க இருப்பதால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டி மாவட்ட அதிகாரிகள் மனு அளித்தனர்.

ஆனால், அவர்களது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ '' சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்" என்றும், "மதுரை தவிர மற்ற தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்" என்றும் அறிவித்துள்ளார்.

வழக்கமாக தேர்தல் 6 மணிக்கு முடிவடைந்து, தேர்தல் இயந்திரங்களை ஒப்படைக்க இரவு 12 மணிவரை ஆகும். இந்நிலையில், இரண்டு மணி நேரம் நீடிக்க உள்ளதால், தேர்தல் பணி முடிவடைய இரவு வெகுநேரம் ஆகும் என தெரிகிறது.

இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள பெண் அதிகாரிகள் பலர் தங்களது பணியில் இருந்து விலகி கொள்ள நினைப்பதாக தெரிகிறது. வாக்குப்பெட்டிகளை பாதுகாக்க முன்தினம் இரவு முதல் வாக்குச்சாவடியில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும். 

இவ்வாறு பணிநேரம் நீடித்தால் முழுமையாக இரண்டு நாட்கள் தங்கியிருக்க வேண்டிய நிலை அதிகாரிகளுக்கு ஏற்படும். எனவே, தங்களது பணிகளில் இருந்து பல்வேறு காரணங்களை கூறி தேர்தல் பணியில் இருந்து தப்பித்து கொள்ள நினைப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai election officers avoid election work


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->