தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு!! மாநில தேர்தல் ஆணையம் அதிரடி !! - Seithipunal
Seithipunal


தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிகளின் பதவிக் காலம், கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இதனையடுத்து, 2016 ஆம் ஆண்டு நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தேர்தல் பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதனிடையே, உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது அறிவிப்பீர்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.  அதற்கு, வரும் மே மாத இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணை மே மாத இறுதியில் அறிவிக்கப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Local Body Election Announcement


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->