வெளியானது பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை அறிவிப்பு.! உறுதி செய்த சுதீஷ்.!!  - Seithipunal
Seithipunal


17-வது மக்களவை தேர்தல் அடுத்தச் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் யார் யாருடன் கூட்டணி வைத்தால் வெற்றி பெறலாம் என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை தேசிய கட்சியான காங்கிரஸ், திமுகவுடன் கூட்டணி வைப்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் ஆளும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் பேசி வருகின்றன.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தேமுதிக இந்த முறையும் தொடரும் என்ற பேச்சுகளும் அடிபட்டு வந்தது. ஆனால், இதனை உறுதி செய்ய அல்லது மறுப்பு தெரிவிக்க வேண்டிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அவரின் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார்.

இதனால், வரும் பாராளுமன்ற தேர்தலில், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்த குழு மாநில கட்சிகளுடனும், பாஜவுடனும்  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், இன்று (12.2.2019) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் அவர்கள் அளித்துள்ள பேட்டியில், ''கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பாஜக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கூட்டணி குறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நட்பு அடிப்படையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மேலும், மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த மாத இறுதிக்குள் கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படும். கடந்த தேர்தலில் 14 தொகுதியில் போட்டியிட்டோம். அதுவேதான் இப்போதைய நிலையும். நாங்கள் இடம்பெறும் கூட்டணி தான் தமிழகத்தில் வெற்றி பெறும்'' என்று தெரிவித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

English Summary

lk sudhish open talk about bjp dmdk alliance


கருத்துக் கணிப்பு

இந்த முறை மத்தியில் யார் ஆட்சி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?கருத்துக் கணிப்பு

இந்த முறை மத்தியில் யார் ஆட்சி அமைய வேண்டும் என நினைக்கிறீர்கள்?
Seithipunal