சிறுமி ராகுலிடம் கேள்வி எழுப்பிய விவகாரம்.! உண்மையான வீடியோ சற்றுமுன் வெளியானது.!! பலரின் முகத்திரை கிழிந்தது.!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் தலைவர், இரண்டு நாள் சுற்றுலாப் பயணமாக, துபாய் சென்றார். அப்போது, அங்குள்ள இந்தியர்களையும் சந்தித்தார். அப்போது ராகுல் கூறுகையில், தற்போது, இந்தியாவில், பா.ஜ.க. மதவாதத்தை திணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி வரும் போது, இந்த நிலைமை மாறும், என்றார்.

பொய்யான செய்தி

அப்போது, அவரிடம் துபாயில் வசிக்கும் 14 வயது சிறுமி, பேச வேண்டும், என்று கையைத் துாக்கினாள். ராகுல், அந்த சிறுமியிடம் மைக்கை கொடுக்கச் சொன்னதாகவும், அந்த சிறுமி, “மதவாதம் அதிகரித்து விட்டது, என்று சொல்லும் நீங்கள், குஜராத்தில் தேர்தல் நடைபெற்ற போது, ஏன் கோவிலுக்குள் சென்றீர்கள்? என்று கேள்வி எழுப்பியதாகவும் பல செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

ஸ்க்ரீன் ஷாட்

மேலும், சிறுமியின் அந்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல், “அனைத்து மதமும் சமம் என்பதற்காகவே, கோவிலுக்குள் சென்றேன் என்று அவர் தெரிவித்ததாகவும், அப்போது அந்த சிறுமி, மீண்டும் “இது வரை, இந்தியாவில், 80 சதவீதம் காங்கிரஸ் ஆட்சி தான் நடைபெற்றது. அப்போது செய்யாததையா, இனி செய்து விடப் போகிறீர்கள்? என்று கேள்வி கேட்டதாகவும், இந்தக் கேள்வியால் ராகுல் திணறிப் போனதாகவும் பின், இந்த கேள்வி நிகழ்ச்சியின் நேரலை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது என்றும் அந்த பொய் செய்திகள் பரவின. 

ஸ்க்ரீன் ஷாட்

இந்நிலையில், ராகுலிடம் கேள்வி கேட்க கையில் மைக்குடன் இருக்கும் அந்த சிறுமி, ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் அந்த சிறுமி இருக்கும் புகைப்படம்  KidsandShare யு டியூப் சேனலில் உள்ள வீடியோவில் இருந்து ஸ்க்ரீன் ஷாட் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கையில், துபாயில் காங்கிரஸ் தலைவர் ராகுல்  முதலாவதாக பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கேள்விக்கு பதில் அளித்தார் என்றும், இரண்டாவதாக தொழிலாளர் முகாமிலும், மூன்றாவதாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் கலந்து கொண்டதாகவும் தெரிவித்த அவர்கள், இந்த நிகழ்ச்சியில் தவறான எந்த கேள்வியும் கேட்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிலால் அலி என்பவர் உலக தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ''துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த அந்த நிகழ்வில், உண்மையில் அந்த நிகழ்ச்சியில் யாரும் கேள்வி கேட்கவே இல்லை. வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணிக்கு ராகுல் பேச தொடங்கினார். அந்த பேச்சில் சகிப்புத்தன்மையின் தேவை. இந்திய வள்ர்ச்சியில் என்.ஆர்.ஐ-இன் பங்கு குறித்து பேசினார். செய்திதாள்களில் வெளியிட்டது போல அந்த சிறுமி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

little girl ask question to rahul now true be come


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->