மோடிக்கு எச்சரிக்கை விடுத்த அர்ச்சகர்! நடக்கும் உச்சக்கட்ட மோதல்! தோல்வியில் இருந்து தப்பிக்க சொன்ன வழி என்ன தெரியுமா?! - Seithipunal
Seithipunal


ராமர் கோயிலை கட்டி முடியுங்கள் இல்லையென்றால் 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் நிச்சயமாக  தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என பாஜகவுக்கு கோயில் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அயோத்தியில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நேற்றுஅவர் அளித்த பேட்டியில், 

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில்  அயோத்தியின் கடவுள் ராமரின் நல்லாசிகளோடு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு பாஜக, ராமரை மறந்துவிட்டது. அவர்கள் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நினைத்தால் உடனடியாக ராமர் கோயிலைக் கட்டத் ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார். இல்லையென்றால் 2019-ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நீங்கள் நிச்சயமாக தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். 

சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியைச் சந்தித்தது. இது அவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என நினைக்கிறன். உடனடியாக ராமர் கோயிலை பாஜக கட்டத் தொடங்கினாள் ராமர் அந்தக் கட்சியை ஆசிர்வதித்து வெற்றியை கொடுப்பார் எனவும் கூறியுள்ளார். 

நேற்று முன்தினம் டெல்லியில் பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, “2019-ம் ஆண்டு தேர்தலை நாட்டின் வளர்ச்சி, மக்களுக்கு பாஜக செய்துள்ள நலத்திட்டங்களின் அடிப்படையிலேயே பாஜக சந்திப்போம். இந்தத் தேர்தலில் இந்துத்துவா கொள்கைகள், ராமர் கோயில் உள்ளிட்ட விவகாரங்களுக்கு இடமிருக்காது என்றும் கூறினார்.  கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் செய்துள்ள நல்லாட்சியின் மூலம் வெற்றியைப் பெறுவோம்”  என்றும் கூறினார் இதைத் தொடர்ந்தே ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் சத்யேந்திர தாஸ் இவ்வாறு பேட்டியளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kurukkal warn to prime minister for 2019 election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->