வெளியானது இடைத்தேர்தல் முடிவுகள்.! பாஜகவுக்கு அதிர்ச்சி கலந்த வெற்றி.!! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலத்தில் கலியாகவுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

கேரளா மாநிலத்தில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெற்று வருகிறது. பினராயி விஜயன் முதலமைச்சராக உள்ளார். உச்சநீதிமன்றம் கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற அதிரடி தீர்ப்புக்கு பின், கடந்த 30 நாட்களாக அம்மனிலத்தில் பரபரப்புக்கு பஞ்சமில்லை.

அம்மாநிலத்தின் சட்டமன்றத்தையே முடக்கும் அளவுக்கு பிரச்னை தலைவிரித்து ஆடுகிறது. சபரிமலை பிரச்னையை ஆர்எஸ்எஸ் கையில் எடுத்து போராட்டம் செய்துவருகிறது. அதே சமயத்தில், கேரள மாநில அரசானது, உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வழிகளை செய்துவருகிறது.

இதற்கிடையே அம்மாநிலத்தில் காலியாக இருந்த 39 உள்ளாட்சி அமைக்குகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்தது. தற்போது அந்த தேர்தலின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.

அதே சமயத்தில் 2 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, அக்கட்சியினரிடையே மனநிம்மதியடைய செய்துள்ளது.
39 இடங்களில்.,

* மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 21 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
* காங்கிரஸ் கூட்டணி 12 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 
* பாஜக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala by election result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->