உங்க பிள்ளைங்க வாட்ச்மேன் ஆகணுமா? இல்லை...மோடியின் பிரச்சாரத்தை கேலி செய்த கெஜ்ரிவால்!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேசிய கட்சிகள் அனைத்தும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் பிரதமர் மோடி நான் காவலாளி என பிரச்சாரத்தை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தொடங்கி வைத்துள்ளார். மேலும் தனது ட்விட்டர் கணக்கில் தனது பெயருக்கு முன் சவுக்கிதார் (காவலாளி) எனவும் இணைத்துகொண்டார். 

அதனை தொடர்ந்து பாஜக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் அனைவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பெயருக்கு முன்  சவுகிதார் என இணைத்து கொண்டனர்.

இதனை பிற கட்சியினர் கேலி செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கெஜ்ரிவால்  விமர்சனம் செய்து பேசியுள்ளார். பிரதமர் மோடி நாடு முழுவதையும் மாற்ற முயற்சி செய்கிறார். உங்களது குழந்தைகள் வாட்ச்மேனாக வேண்டும் என்றால் மோடிக்கு வாக்களியுங்கள். 

ஆனால் உங்களது குழந்தைகள் நல்ல கல்விஅறிவு பெற்று மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், சிறந்த வழக்கறிஞர்களாகவும் பதவி வகிக்க வேண்டும் என்றால் படித்த பண்பானவர்களான ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kejriwal teased modi chowkidar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->