ஓபிஎஸ், இபிஎஸ்க்கு எதிரான பழனிசாமியின் வழக்கு தள்ளுபடி! நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! தொடர் வெற்றியால் அதிமுக கொண்டாட்டம்!  - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தொடங்கப்பட்ட போது இருந்த விதிகளை  மாற்றம் செய்து, பொதுச்செயலாளர் என்ற பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது அதிமுகவின்  சட்ட விதிகளுக்கு உட்படாதது என்பதால் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

அதிமுகவில் பொதுச்செயலாளர்  பொறுப்பு என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதி. அதேபோல தேர்தல் தொடர்பான வேட்பு மனு படிவத்தில் பொதுச்செயலாளர் மட்டுமே கையெழுத்திட முடியும் என்பதும் அதிமுகவின் விதி. தற்போது வேட்பளர்களின் வேட்பு மனு ஏ மற்றும் பி படிவங்களில்  ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என  கே.சி.பழனிசாமி மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஓத்தி வைத்திருந்தனர். இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது  கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து, அதிமுக வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க முடியாது எனக் கூறி, பழனிச்சாமியின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

கடந்த 26 ஆம் தேதி சின்னம், கட்சி  தொடர்பான சிக்கலில் இருந்து தினகரன் வெளியேறிய நிலையில், இன்றைய தீர்ப்பும் ஓபிஎஸ், இபிஎஸ் க்கு புது உற்சாகத்தை கொடுத்த்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kc palanisamy case rejected by court against ops eps


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->