திமுக, அதிமுகவினர் இடையே திடீர் மோதல்.!! உடைக்கப்பட்ட மண்டைகள் மற்றும் வாகனங்கள்.!! இறுதி நேரத்தில் அதிரும் தேர்தல் களம்.!!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. 

கடந்த 1 மாதமாக ஒவ்வொரு கட்சியின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் இன்று ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், திமுக கூட்டணிக்கட்சியினரும், அதிமுக கட்சியினரும் இன்று கரூர்  பேரூந்து நிலையம் அருகே பிரச்சாரத்தை முடிப்பதற்கு திட்டமிட்டு மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியிருந்தனர். இரு கட்சிகளும் ஒரே நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை முடித்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்படும் என்ற காரணத்தால் சில மணி நேரத்திற்கு முன்பு இரு கட்சிகளுக்குமான அனுமதியானது  மறுப்பதாக அறிவித்தார்.

ஆனால் சில மணி நேரத்திற்கு முன்பு இந்த பகுதியில் திமுக மற்றும் அதிமுகவினர் இறுதிகட்ட பிரச்சாரதிற்கு தடைவிதிப்பதாக அறிவித்தனர். மேலும் பேரூந்து நிலையம் பகுதியில் பாதுகாப்புக்காக 250 துணை இராணுவப்படையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் வெங்கமேடு என்னும் பகுதியில், திமுகவை சேர்ந்த செந்தில் பாலாஜி, திருச்சி சிவா காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தனர். அதனை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்காக பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது திடீரென இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் 2 பேர் மண்டை உடைக்கப்பட்டது. மேலும்  அதிமுகவினர் சென்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் கரூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karur admk and dmk fight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->