சோனியாகாந்தி உட்பட 3 மாநில முதல்வர்கள் தமிழகம் வருகை.! ஸ்டாலின் அறிவிப்பால் திமுகவினர் கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


வரும் 16-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில், மறைந்த திமுக தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் உருவ சிலை திறக்கப்பட உள்ளது. சிலை திறப்பு விழா முடிந்த உடன், ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த விழா குறித்து திமுகவின் தலைவர் முக ஸ்டாலின் நேற்று தெரிவிக்கையில், ''வரும் 16-ம் தேதி அண்ணா அறிவாலய வளாகத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பதற்கான பணிகள், முழுவீச்சில் நடந்து வருகின்றது. 

சிலை திறப்பு விழா, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் முன்னிலையிலும், எனது தலைமையிலும்  நடக்கவுள்ளது. கருணாநிதி, அண்ணா சிலை-களை தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள் திறந்து வைக்கிறார். 

இந்த விழாவில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்டோர்பங்கேற்க உள்ளனர். விழா முடிந்த உடன் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில் நாட்டில் உள்ள முக்கிய தலைவர்களும், தோழமை கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்'' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARUNANITHI STATUE OPEN IN CHENNAI


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->