பிரச்சாரம் சூடுபிடிக்கும் வேளையில், காங்கிரஸ் வேட்பாளரின் சொத்துகள் முடக்கம்! கலக்கத்தில் திமுக! - Seithipunal
Seithipunal


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிவகங்கை தொகுதியின் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் 22.28 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை முடக்கம் செய்வதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நீண்ட நாட்களாக நடைபெற்றுவரும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 வர்த்தக நிறுவனங்களின் சொத்துகளும் முடக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. 

அதனை வைத்து ரூ.305 கோடி முதலீட்டை சட்ட விரோதமாகப் பெற அனுமதி என குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கானது நீண்ட நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் கைது செய்யாமல் இருக்க ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், தரப்பில் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக தடை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம்,  ஐ.என்.எக்ஸ் மீடியா இயக்குநர்கள் மீது வழக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வழக்குகள் இருப்பதை காரணம் காட்டியே ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஆகியோருக்கு சீட் இல்லை என காங்கிரஸ் தலைமை கூறியது. ஆனால் ப.சிதம்பரம் பிடிவாதமாக சீட் வாங்கினார். தற்போது சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஏற்படும் அவப்பெயரால் கூட்டணியின் வெற்றிக்கு பங்கம் வருமோ என திமுகவினர் வயிற்றில் புளியை கறைத்துக்கொண்டுள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthik chidambaram assets freezing


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->