ஒரே இடத்தில் கூடிய 76 எம்.எல்.ஏ.,க்கள்! ஆட்சி பறிபோகும் பயத்தில் ஆளும் கட்சி! ஆட்சியை கலைக்க பா.ஜ.க சதி! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவில், முதல்வர் குமாரசாமி தலைமையிலான, மதச் சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அமைச்சரவை விஸ்தரிப்புக்கு பின், காங்கிரசில் அதிகரித்த அதிருப்தி, இன்னும் ஓயவில்லை.

அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, ரமேஷ் ஜார்கிஹோளி, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லி சென்றிருந்தார். பா.ஜ.க மேலிட தலைவர்களை சந்திக்க முயற்சித்தார். இதற்கிடையில், கார்ப்பரேஷன் மற்றும் வாரிய நியமனத்துக்கு பின், காங்கிரசில் சில, எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் கொதித்தனர். 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் சிறப்பு கூட்டம், சித்தராமையா தலைமையில் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. எம்.எல்.ஏ.,க்கள் ஒவ்வொருவராக வந்ததால், கூட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியில், 76 எம்.எல்.ஏ.,க்கள் வந்தனர். நாகேந்திரா, மகேஷ் கமடள்ளி, உமேஷ் ஜாதவ், ரமேஷ் ஜார்கிஹோளி சிறப்பு கூட்டத்துக்கு வரவில்லை.

பா.ஜ.க.வின், ஆப்பரேஷன் தாமரை முயற்சி இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே, எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சில நாட்கள் கட்டாயமாக சொகுசு விடுதியில் தங்க வேண்டும். எந்த விளக்கமும் தேவையில்லை. வீட்டுக்கு செல்ல வாய்ப்பு அளிக்க முடியாது. தொலைபேசி மூலம் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, விடுதிக்கு செல்லும் விஷயத்தை கூறி, உங்களுக்கு தேவையான பொருட்களை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

இதையடுத்து, காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், பிடதியில் உள்ள சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு தங்க வைத்துள்ளனர். இதனால், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு ஆபத்து நீடிக்கிறது. குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினர், கடும் கலக்கத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Congress MLAs Meeting


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->