கடைசி நேரத்தில் காலைவாரிய மாநில காங்கிரஸ் தலைவர்.. பாஜகவில் இணைந்தார்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட ஒரு வாரம் ஆகிய நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. தேர்தல் வியூகம், கூட்டணி, தொகுதி, வேட்பாளர், கட்சி தாவல் என்று பரபரப்பான செய்திகள் மக்களையும் பரபரப்பாக வைத்து வருகிறது.

இந்த மக்களவை தேர்தலில் வழக்கம் போல் தேசிய கட்சிகளான பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மாநில கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பாஜகவில் இணையும் நிகழ்வுகள் தினமும் அரங்கேறி வருவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில். கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கூட்டணி சிறப்பான ஆட்சியை நடத்தவில்லை என்று, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் மஞ்சு அவர்கள் இன்று தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

மேலும், அவர் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர், காங்கிரஸ் கட்சி ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி தொடர்ந்தால், காங்கிரசின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARNADAKA CONGRESS LEADER RESIGN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->