கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்பு..!  பிரபல நடிகர்க்கு போனில் அழைப்பு..!! - Seithipunal
Seithipunal


கர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்கவுள்ள விழாவுக்கு ரஜினியை பங்கேற்குமாறு குமாரசாமி போனில் அழைத்துள்ளார். கர்நாடகா முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்று கொள்ளப்போகும். 

இந்த விழாவில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு குமாரசாமி அழைப்பிதழ் அனுபவித்துயுள்ளார். அதன்படி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒரிஸா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அஸ்ஸாம் முத்லவர் பிரபுல்லா குமார் மஹான்தா, மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி. ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியேருக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இந்நிலையில் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொள்ள வேண்டும் என்று குமாரசாமி அவருக்கு போன் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். இரு தினங்களுக்கு முன் ரஜினி பேட்டி அளித்தபோது புதிதாக பதவியேற்கும் காங்கிரஸ்- ஜேடிஎஸ் அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

அதற்கு பதிலடியாக குமாரசாமி நேற்று கூறுகையில், ரஜினி கர்நாடகாவுக்கு வந்து அணைகளை பார்வையிடட்டும், தண்ணீர் இருந்தால் அவராகவே திறந்து விடட்டும். நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம் என்று கூறியிருந்த நிலையில் ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnadaka cm in phone calling in actor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->