அன்று கூவத்தூர் ரெஸ்டாரண்ட்., இன்று ஹரியானாவில் உள்ள விடுதி.! மிரட்டும் பாஜக.!! வெளியான பரபரப்பு தகவல்., மிரளும் அரசு.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் விதானசவுதாவில் நேற்று கர்நாடக மாநிலத்தின் முதலைச்சர் குமாரசாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

காங்கிரசின் கூட்டணி ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்களை எங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் யாரும் ஈடுபடவில்லை., கூட்டணி ஆட்சியை கலைப்பதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் தான். 

அவர்களை எங்கள் பக்கம் இழுப்பதாக எடியூரப்பா எழுப்பும் குற்றசாட்டு., மிகுந்த ஆச்சரியத்தை தான் எனக்கு தருகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்ற விசயத்தை குற்றம் சாட்டி இருக்கும் நிலையில்., எதற்காக பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஹரியானாவில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்கள். 

வறட்சி பதித்துள்ள தாலுகா பகுதிகளில் நிவாரண பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று எடியூரப்பா குற்றம் சாட்டி வரும் சமயத்தில்., பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் ஹரியானாவில் உள்ள விடுதியில் தங்கி இருந்து ஆலோசனை நடத்தி வருகின்றனரா? என்று அவர்கள் கட்சியின் பிரமுகர் கூறவேண்டும். ஒரு நாட்கள் குடும்பத்துடன் நாட்களை செலவிட்ட விசயத்தை பெரிதுபடுத்திய எடியூரப்பா., தற்போது மவுனம் காத்துள்ளார். 

ஹரியானாவில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களின் அலைபேசியை பறித்துள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில்., இதனையெல்லாம் அவர்கள் எதற்க்காக செய்கின்றனர் என்று தெரியவில்லை. கூட்டணி ஆட்சியை கவிழ்க்க அவர்கள் எந்தவிதமான முயற்சியும் செய்கின்றனர் என்று நான் எந்த விதமான குற்றமும் சாட்டவில்லை, 

அது போன்ற செய்திகள் பத்திரிகைகளில் வருகின்றன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இது போன்று எம்.எல்.ஏக்களை அடைத்து வைத்து இருந்ததில்லை., இது போன்ற செயல்களை பாரதிய ஜனதா கட்சிதான் செய்கிறது. நாட்டில் அன்றாடம் நடைபெறும் பிரச்சனைகளை மக்கள் தொடர்ந்து கவனித்துக்கொண்டு தான் இருக்கின்றனர்., அவர்களே நல்ல முடிவை எடுப்பார்கள் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnadaga bjp mla problem talk about kumarasamy


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->