குதிரை பேரத்தில் ஈடுபடுவது முதல்வர்தான்.! எதிர்க்கட்சி தலைவரின் திடீர் அறிவிப்பால் பரபரப்பு.!!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் கூட்டணி ஆட்சியை கவிழ்ப்பதற்க்காக பாரதிய ஜனதா கட்சியின் "ஆபரேஷன் தாமரை" மூலமாக எம்.எல்.ஏக்களை பாஜக வசம் இழுக்க முயற்சித்து வருவதாக கர்நாடக மாநிலத்தின் முதமைச்சர் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர். 

இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்களை முதல்வர் குமாரசாமி அவர் வசம் இழுப்பதற்கு முயற்சித்து வருகிறார் என்று கூறிய அவர்கள்., 3 நாட்களாக டெல்லியில் உள்ள விடுதிகளில் முகாமிட்டு வருகின்றனர். 

இந்த நிலையில்., காங்கிரஸ் வசம் இருந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கம் தங்களின் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தகவல் பரவியதை அடுத்து., நேற்று யாரும் பதவி விலகவில்லை. 

இந்த நேரத்தில் கர்நாடக முதல்வர் குமாரசாமி., எனது பலம் என்ன என்பது குறித்து எனக்கு நன்றாக தெரியும்., இதனால் அரசிற்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படப்போவது இல்லை., இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பாரதிய ஜனதாவிற்கு ஆதரவு கொடுத்தால் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த சமயத்தில் எடியூரப்பா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்., எங்களின் தரப்பில் இருந்து யாரையும் கூட்டணிக்கு அழைக்கவில்லை., அவர்களை எங்கள் வசம் சேர்க்கும் முயற்சியிலும் எடுபடவில்லை., இதற்கான குதிரை பேரத்தில் குமாரசாமி ஈடுபட்டு., மந்திரி பொறுப்பு மற்றும் பணம் வழங்குவதாக கூறி அவர் வசமே எம்.எல்.ஏக்களை வைத்திருக்க முயற்சி செய்து எங்களின் மீது பலி சுமத்தி வருகிறார் என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karanaga bjp minister talk about 2 MLA problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->